ஆபத்தின் முழு உருவம் அஜினோமோட்டோ அதிகமாக பகிருங்கள்…

இதன் பிறப்பிடமான சீனாவே, இதை தடை செய்யப்பட்ட இரசாயனமாக அறிவித்தது. காரணம் அஜினோமோட்டோ சேர்க்கப்பட்ட உணவால் மோசமான சிறுநீரக செயலிழப்பு (kidney failure) நோயால் அங்குள்ள மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். சீனா இந்த வேதிப்பொருளை தங்களை விட்டு விரட்டி பலகாலங்கள் ஆனாலும், ஒரு நாட்டின் கழிவுப் பொருளை உணவாக ஏற்றுக்கொண்டு, அதனை பெருமையாக நினைத்து கொண்டாடும் நாம் வழக்கம் போல இந்த விஷத்தையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

சில, பல நகரங்களை மட்டுமே தாக்கிக் கொண்டு இருந்த இந்த அபாயம் விளம்பர மாயையின் காரணமாக இயற்கை உணவுகளையே உட்கொண்ட கிராம மக்களையும் தாக்க தொடங்கி இருக்கிறது என்பது தான் வேதனை.

அஜினோமோட்டோ எனும் ஒரு சுவை சேர்க்கும் பொருள் இப்போதெல்லாம், எல்லாவகை சைனீஸ், இந்திய உணவு வகைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. இது ஒரு நச்சுப்பொருள் என்பது தெரியாமலேயே அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் தீமைகள் தெரிந்தால் அதை யாரும் பயன்படுத்தவோ, சாப்பிடவோ மாட்டார்கள் என்பது உறுதி.

இதில் பென்லிலானைன் எனும் ஒரு வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது மூளையின் நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கப்படக்கூடிய தன்மை கொண்டது.

மேலும்  இதைப்பயன்படுத்துபவர்களுக்கு அதிகப்படியான கோபம், மன அழுத்தம் ஆகியவை தேவையில்லாமல் ஏற்படும்.மேலும் இது வன்முறை எண்ணங்களையும் தூண்டும் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

மேலும் அஜினோமோட்டோவில் 10% மெத்தனால் கலந்துள்ளது. அது ஒரு நேரடி விஷம். கள்ளச்சாராயங்களில் காணப்படும் மெத்தனால்தான் இது. இதன் மூலம் கண் எரிச்சல், நரம்புத்தளர்ச்சி போன்றவை நாளடைவில் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதைவிட பயங்கரமாக இது மரபுக்கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

அடுத்ததாக அஸ்பார்டிக் ஆஸிட் எனப்படும் அமிலம் அஜினோமோட்டோவில் கலந்துள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கக்கூடியது. குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களில் ஊடுருவி, ஞாபக மறதி, வலிப்பு நோய், மனநோய் போன்றவற்றில் கொண்டுவிட்டுவிடும்.

இதுவும் அஜினோமோட்டோ கலந்த நூடுல்ஸ் அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

அதைவிட ஆபத்தைவிளைவிக்கக்கூடியது, MSG எனப்படும் மோனோ சோடியம் க்ளூட்டாமேட் எனும் வேதிப்பொருள்! இது ஒரு நச்சு உணவு! இது கலந்த உணவை உண்டவர்கள் அதிகம் தூங்க ஆரம்பிப்பார்கள்.

மேலும் வயிற்றில் புண் மற்றும் சரியான நேரத்துக்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் அல்சர் ஆகியவை ஏற்படும். மேலும் எப்போதும் ஒரு சோர்வான உடல்நிலையை இது ஏற்படுத்தும். இவ்வளவு கெடுதல்களையும் கொண்ட ஒரு உணவை காசு கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உணவகங்கள் அவர்களை பலவீனப்படுத்தவேண்டாம்.

திருமூலர் வாக்குப்படி உடல்வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்று உணவே மருந்தாக இருக்க வேண்டுமே ஒழிய உணவே விஷமாக மாறக்கூடாது. பொதுவில் உணவு கட்டுப்பாடு மனிதனின் ஆயுளை நீட்டிக்கிறது என்பது தான் மருந்தில்லா மருத்துவம்.

குழந்தைகள் நலன் கருதி அவர்களுக்கு மிக மோசமான விளைவுகளை தரக்கூடிய உணவுப்பொருட்கள் என்று விற்கப்படும் விஷப்பொருட்களை தவிர்ப்போம். இயற்கை உணவோடு ஆரோக்கியம் காப்போம்..

இதுபோன்ற விழிப்புணர்வு பதிவுகளை அதிகமாக பகிருங்கள்

இந்த பதிவு குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி…