சந்திரகிரணத்திற்க்காக 3 மாத குழந்தையின் தலையை வெட்டி நரபலி…!!!

0
11

அபூர்வ சந்திர கிரகணம் தோன்றிய நேரத்தில் வீட்டின் மொட்டை மாடியில் 3 மாத கைக் குழந்தையின் தலை வெட்டி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நேற்று முன்தினம் அபூர் சந்திர கிரகணம் தோன்றியது. சூப்பர் மூன், பிளட்டட் மூன், ப்ளு மூன் ஆகிய மூன்றும் ஒரே நாளில் தோன்றியது. இது 152 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் அரிய நிகழ்வு என்பதாம் இதை நாடு முழுவதும் கொட்டும் பணியிலும் மக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

இந்நிலையில் இந்த அபூர்வ சந்திர கிரகணம் தோன்றும் நேரத்தில் ஆந்திராவில் பயங்கர கொடூரம் ஒன்று சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் சில்கானா மாவட்டம் ஐதராபாத்தின் சில்கா நகர் பகுதியில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் 3 மாத குழந்தையின் தலை மட்டும் தனியாக கிடந்து உள்ளது. இது குறித்து நேற்று காலை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் வந்து பார்க்கும் போது கூர்மையான ஆயுதத்தால் குழந்தையின் தலை வெட்டப்பட்ட நிலையில் கூரை மீது வைக்கப்பட்டு உள்ளது

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இந்த குழந்தை பலி கொடுத்திருக்கலாம் அல்லது கிரகணத்தின் போது குழந்தையை பலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என்ற ஆசைக்காக இப்படி செய்திருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது தலையை வெட்டி கூரை மீது வைத்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து ரச்சகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அது பெண் குழந்தையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. குழந்தையின் உடல் இன்னும் கிடைக்கவில்லை. எனவே, அந்த குழந்தை ஆணா பெண்ணா என்பதை போலீசாரால் உறுதிபடுத்த முடியவில்லை.

புதன்கிழமை சந்திர கிரகணம் என்பதால் யாரும் வீட்டின் மாடிக்கு செல்லவில்லை. மறுநாள் காலை அந்த வீட்டில் வசித்த பெண் மாடிக்கு சென்றபோது, குழந்தையின் தலை கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் கூறியுள்ளார்

LEAVE A REPLY