“ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” திரைப்பட விமர்சனம்..!!!

0
115

விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகிக்கொண்டே போகிறதென உறுதியாகக் கூறலாம். இளம் இயக்குநர்களுக்கு அதிகளவில் வாய்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர் என்கிற பெருமையும் கூட விஜய் சேதுபதிக்கு உண்டு. தரமான படங்களின் மூலம் ஈர்க்கும் விஜய் சேதுபதியிடம் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படம் அவரது நல்ல படங்கள் பட்டியலில் சேர்ந்திருக்கிறதா… அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் விஜய் சேதுபதியைச் சரியாகப் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கிறாரா? அட்வென்ச்சர் காமெடி படமாக உருவாகியிருக்கும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படம் எப்படி?

விஜய் சேதுபதி, ரமேஷ் திலக், ராஜ்குமார் மூவரும் பல்வேறு கெட்டப்களில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் கொள்ளையடிக்கிறார்கள். அப்போது, தான் செய்துகொடுத்த சத்தியம் ஒன்றிற்காக நிஹாரிகாவை தனது ஊருக்குக் கடத்திச் செல்கிறதுவிஜய் சேதுபதி டீம். இதற்கிடையே, நிஹாரிகாவும், கௌதம் கார்த்திக்கும் நெருக்கமாகப் பழகுகிறார்கள். கடத்தப்பட்ட நிஹாரிகாவை தேடி கௌதம் கார்த்திக்கும் அவரது நண்பர் டேனியலும் எமசிங்கபுரத்துக்குச் செல்கிறார்கள். அங்கே பல வித்தியாசமான சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். அந்தப் புதிரான உலகத்துக்குள் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? நிஹாரிகாவை மீட்டுக்கொண்டு சென்றார்களா? நிஹாரிகா ஏன் கடத்தப்பட்டார் என்பதெல்லாம் மீதிக்கதை

 

பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த கதைக்கரு கடைசியில் மிகவும் சிம்பிளானது போல் தெரிந்தது.

சில காமெடிகள் ஒர்க்கவுட் ஆகாதது போல இருந்தது.

மொத்தத்தில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் முழுமையான பொழுதுபோக்கு. நம்பி போகலாம்.

LEAVE A REPLY