மாணவன் டீச்சர் வகுப்பறை உரையாடல் நகைச்சுவையான பதிவு..

டீச்சர் : ஏன்டா… இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?

மாணவன்: கரண்ட்டு இல்ல டீச்சர் …

டீச்சர் : வெளக்கு, மெழுகு வர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?

மாணவன்: ஆமா டீச்சர்… முயற்சி பண்ணினேன்…
ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை…

டீச்சர் ;ஏன்டா…????

மாணவன்: அது பூஜை ரூமுல இருந்துச்சி…

டீச்சர் : உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?

மாணவன்: இல்ல டீச்சர்…
குளிக்கலல்ல… எப்பிடிப் போறது..?

டீச்சர் : குளிக்கலையா….ஏன்?

மாணவன்: மேல் தொட்டியில தண்ணியில்ல…🤗

டீச்சர் : மோட்டார் போட்டு ஏத்த வேண்டியது தானடா?… சோம்பேறி…!! எரும😤

மாணவன்: டீச்சர் , லூசு மாதிரிப் பேசாதீங்க… சொன்னேன்ல கரண்டு இல்லன்னு…😇

டீச்சர்: ஏன்டா… அது சரி நானும் உன் ஏரியாவுல தான் குடியிருக்கன்… எங்க வீட்லலலாம் கரண்டே கட்டாகலியே… பொய்யா சொல்ட்ற..🙄

மாணவன்:உண்ம தான் டீச்சர்… எங்க வீட்ல மட்டுந்தான் கரன்ட் இல்ல… கரண்ட் பில் கட்டலன்னு பீச புடிங்கிட்டாங்க…😣

டீச்சர்; கரண்ட் பில் கட்டக்கூடவா உங்கப்பாட்ட காசு இல்ல…🙃

மாணவன்; ஈ.பி ஆபீசுல போயி பணம் கட்டியாச்சி… லைன் மேன் தான பீசு போடணும்… அவரு வரல…😕

டீச்சர்; ஏரியா லைன்மேன் போன் நம்பர வாங்கி வரசொல்ல வேண்டியது தான…😒

மாணவன்; வரச்சொல்லலாம் தான்… ஆனா முடில…😰

டீச்சர்;ஏன்… செல்லு ரீசார்ஜ் பண்ணலியா…😧

மாணவன்;அதுலாம் இருக்கு… செல்லுல சார்ஜ் தான் இல்ல…😡

டீச்சர்: அது ஏன்…😵

மாணவன்; டீச்சர் நீங்க லூசே தான்…😠 அதான் மொதல்லயே சொன்னேன்ல… எங்க வீட்ல கரண்ட் இல்லன்னு…😬