ஸ்கெட்ச் வெற்றி சந்திப்பில் சியான் விக்ரம்..!!!

0
54

ஸ்கெட்ச் ’ விக்ரமுக்கு வெற்றியா, தோல்வியா? இந்தக் கேள்வி பொதுவான சினிமா ரசிகர்களுக்கு இருந்திருக்கலாம். க்ளியர் பண்ணிட்டாப் போச்சு என்று சக்சஸ் மீட் வைத்தது ஸ்கெட்ச் படக்குழு! ‘இருமுகன்’ படத்தை தயாரிப்பதாக இருந்தார் தாணு. என்ன நினைத்தாரோ விக்ரம்? டைரக்டரை அப்படியே நைசாக தள்ளிக் கொண்டு போய் ஷிபுதமீம் என்ற வேறொரு தயாரிப்பாளரிடம் கோர்த்துவிட்டு விட்டார்.

இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வஞ்சித்த விக்ரம் மீது வருத்தத்தில் இருந்த தாணு, இருமுகன் வெற்றியை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. (இதுபோல பல பல டுமாங்கிகளை கடந்தவராச்சே?) ஆனால் காலம், தாணுவின் கையில் கொண்டு வந்து ஸ்கெட்சை சேர்த்தது. இவரது அண்ணன் மகன்தான் படத்தின் தயாரிப்பாளர். படத்தை நல்ல முறையில் வெளியிட்ட தாணு, நேற்று தனது அன்பை பகிர்ந்து கொண்டார். ‘என் கண்கள் பனிக்கிற அளவுக்கு இப்படம் வெற்றியை கொடுத்துவிட்டது. நான் விக்ரமை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்’ என்றது தாணுவின் பெருந்தன்மை.

மேலும் அவ்விழாவில் பொது உதவி இயக்குனர்களை மேடைக்கு அழைத்து பேச வைத்த நெகுழ்ச்சியான தருணம் கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்

LEAVE A REPLY