ஸ்கெட்ச் VS தானா சேர்ந்த கூட்டம்…???

0
96

தானா சேர்ந்த கூட்டம்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் மற்றும் பலர் நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார். நல்ல வெற்றியைக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்திருக்கும் சூர்யா இந்தப் படத்தில் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறாரா? ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் எப்படி?

கதை

வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் தொடங்கிய காலகட்டம் அது. குறைந்த பணிகளுக்காக லட்சக்கணக்கானோர் போட்டிபோடும் சூழலில் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பணம் பெற்றுக்கொண்டு வேலை கொடுத்ததால் தகுதியும், திறமையும் கொண்ட பலர் பாதிக்கப்பட்டனர். அப்படிப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தான் சூர்யாவும் அவரது நண்பர் கலையரசனும். சி.பி.ஐ வேலைக்கு முயற்சி செய்து சி.பி.ஐ மேலதிகாரியாக இருக்கும் ஒருவரின் சுயநலத்தால் வெளியேற்றப்படுகிறார் சூர்யா. கலையரசன், போலீசில் வேலை பெற முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறார். தம்மைப் போல கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும், தகுதியானவர்கள் அரசுப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்பும் சூர்யா டீசன்டான ராபின்ஹூட்டாக மாறுகிறார். அவர் தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு ஆடும் ஆட்டம் தான் ‘தானா சேர்ந்த கூட்டம்.

போலி சி.பி.ஐ ரெய்டு
சூர்யா தன்னுடன் போலி சி.பி.ஐ ஆபிஸர்களாக ரம்யா கிருஷ்ணன், செந்தில், சத்யன், சிவசங்கர் மாஸ்டர் ஆகிய நால்வரையும் வைத்துக்கொண்டு, அரசை ஏமாற்றி கருப்புப்பணம் வைத்திருப்பவர்களின் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகளாகவும், வருமான வரித்துறை அதிகாரிகளாகவும் நடித்து ரெய்டு நடத்துகிறார்கள். அப்படிக் கொள்ளையடித்த பணத்தை லஞ்சமாக அரசு அதிகாரிகளுக்கே கொடுத்து தகுதியானவர்களை பணியில் சேர்க்கச் சொல்கிறார்கள். அப்படிச் செய்வதால் இவர்களுக்கென வெளியே தெரியாமல் பெரும் ஆதரவு கூட்டம் உருவாகிறது. அடுத்து, தன்னுடன் இருப்பவர்களுக்காக பெரிய பிளான் ஒன்றை செயல்படுத்த நினைக்கிறார் சூர்யா. அப்போது, போலீசுக்கு இவர்களைப் பற்றிய துப்பு கிடைக்கிறது. அதை வைத்து அவர்களை நெருங்குகிறார்கள்.

நடிப்பு
சில வருடங்களுக்குப் பிறகு செம ஸ்டைல் வின்டேஜ் சூர்யாவாக திரும்பி இருக்கிறார் சூர்யா. சூர்யா குறும்பாகப் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் செம அப்ளாஸ். கெத்தாக ‘ஜான்சி ராணி சி.பி.ஐ ஆபிஸர்’ என ஐ.டி கார்டு நீட்டுவது, போலீஸிடம் காட்டிக்கொண்டு பதறும் காட்சிகள், நிஜ ஐ.டி.ரெய்டு நடக்கும் இடத்திற்கே தவறுதலாகப் போய் அப்புறம் வழிவது என ரம்யா கிருஷ்ணன் வழக்கம்போல் அசத்தல் பெர்ஃபார்மன்ஸ். வழக்கமான ஐயர் வீட்டுப் பெண்ணாக ‘அபச்சாரம்’ சொல்லாமல் கீர்த்தி சுரேஷ் ஃபோர்ஜரி லேடியாக ஈர்க்கிறார். போலீஸ் அதிகாரியாக அலட்டல் இல்லாமல் நடித்த்திருக்கும் கார்த்திக், சி.பி.ஐ அதிகாரியாக சுரேஷ் மேனன் ஆகியோரும் அசத்தி இருக்கிறார்கள்.

ஸ்கெட்ச்
வாலு’ இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, ஹரீஷ் பெரடி, சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘ஸ்கெட்ச்’. செம ஸ்டைலிஷ் சீயான் விக்ரம், ஸ்வீட் பியூட்டி தமன்னா இருவரும் இந்த நார்த் மெட்ராஸ் கதையின் மூலம் இணைந்திருக்கிறார்கள். விக்ரமை வைத்து இயக்குநர் போட்ட ‘ஸ்கெட்ச்’ ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறதா

கதை
வட சென்னையில் வண்டிகளுக்கு பைனான்ஸ் செய்யும் சேட்டாக ஹரிஷ் பெரடி. இவரது வலது கையாக வாடிக்கையாளர்களின் வாகனங்களை சீஸ் செய்பவர் அருள்தாஸ். ஒரு தகராறில் அருள்தாஸின் கை வெட்டப்பட, அவரது இடத்துக்கு வருகிறார் ஸ்கெட்ச் விக்ரம். அந்த இடத்தைப் பிடிக்க நினைத்திருந்த ஆர்.கே.சுரேஷ் இதனால் அவர்களிடமிருந்து வெளியேறி தொடர்ந்து இவர்களுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். அருள்தாஸ் செய்த வண்டி சீஸ் செய்யும் வேலைகளை கச்சிதமாக முடித்து நம்பிக்கையைப் பெறுகிறார் விக்ரம். விக்ரம் ஸ்கெட்ச் போட்டால் மிஸ்ஸே ஆகாது என்பதால் பயங்கர செல்வாக்கு.
விக்ரம் – தமன்னா
அப்படி, ஒரு வண்டியைத் தூக்கும்போது பார்க்கும் தமன்னாவை காதலிக்கத் தொடங்குகிறார் விக்ரம். தமன்னாவும் தன்னைக் காதலிப்பதாக நண்பர்களிடம் கெத்துக்காக பொய் சொல்லி பிறகு உண்மை தெரிந்து விடுகிறது. பிறகு, தனக்கு இது சரியாக வராது என தமன்னாவை விட்டு விலக நினைக்கிறார் விக்ரம். விக்ரமை முதலில் கெட்டவனாகப் புரிந்துகொள்ளும் தமன்னா, பிறகு உண்மை அறிந்து காதலிக்கிறார். வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள்

நடிப்பு
விக்ரம், எந்த கேரக்டர் என்றாலும் அதற்காக எந்த அளவுக்கும் இறங்கி நடிக்கக்கூடிய நடிகர் என்பது தெரிந்த விஷயமே. இப்படத்தில் ஒரு மாஸான ரௌடியாக ஸ்டைலிஷ் லுக் காட்டியிருக்கிறார். ‘ஜெமினி’ படத்தின் ‘ஓ போடு’ போல இதில் விக்ரமின் ‘ஸ்கெட்ச் போடு’. வயதாவதே தெரியாமல் அத்தனை எனர்ஜியோடு அசத்தியிருக்கிறார் சீயான். கையால் ஸ்கெட்ச் போடுவது, கார் சேஸிங், சென்டிமென்ட் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். தமன்னாவுக்கு நடிப்பதற்கு பெரிய ரோல் இல்லையென்றாலும் அழகிலும், நடிப்பிலும் ஆளை மயக்குகிறார்.

 

இந்த பொங்கல் சூர்யாவின் வசமாக தான் இருக்கிறது என்பது பொதுமக்கள் கருத்து.

மேலும் இதைப்பற்றி தகவல் அறிய கீழே உள்ள விடியோவை பாருங்கள்

 

LEAVE A REPLY