தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை குறித்து, இந்திய வானிலை மையம் அதிர்ச்சி தகவல்..!! அதிகமாக பகிருங்கள்….

0
70

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை குறித்து, இந்திய வானிலை மையம் அதிர்ச்சி தகவல்..!! அதிகமாக பகிருங்கள்….

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கியது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக தமிழ்நாடு, கர்நாடக மற்றும் கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டியில் பெய்துள்ள தென்மேற்கு பருவமழை பற்றிய புள்ளி விவரங்களை இந்திய வானிலை ஆராய்ச்சி துறை வெளியிட்டது.

அந்த தகவலில் குறிப்பிட்டுள்ளதாவது:-

தென்னிந்தியாவில் பொறுத்தவரையில் மொத்தம் 125 மாவட்டங்கள் உள்ளன. அதில், 54 மாவட்டங்களில் பற்றாக்குறையாகவும், 2 மாவட்டங்களில் மிக அதிக பற்றாக்குறையாகவும் பருவமழை பெய்துள்ளது.

அதன்படி, 40% சதவீத மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை குறையாகவே பெய்துள்ளது.

அதிகபட்சமாக, தமிழ்நாட்டில் மட்டும், 20 மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது . ஒரு மாவட்டத்தில், மிகஅதிக பற்றாக்குறையாக பெய்துள்ளது.

 

கேரளாவை பொறுத்த வரையில்,10 மாவட்டங்களில் அதிக மழையும், 2 மாவட்டங்களில் மிகஅதிக மழையும் பெய்துள்ளது.

புதுவையை பொறுத்த வரையில் மொத்தம் உள்ள நான்கு மாவட்டங்களிலும் பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தை பொறுத்த வரையில், மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில், 14 மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறையாகவும், 2 மாவட்டங்களில் மிகஅதிக பற்றாக்குறையாகவும் பருவமழை பெய்துள்ளது.

இவ்வாறு இந்திய வானிலை ஆராய்ச்சி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.