வந்திடுச்சு…..நாட்டு கோழியிலும் கலப்படம்….! திண்டுக்கல் மாவட்டத்தில், டூப்ளிகேட் நாட்டுக்கோழி விற்பனை அமோகம்…..!

0
77

வந்திடுச்சு…..நாட்டு கோழியிலும் கலப்படம்….! திண்டுக்கல் மாவட்டத்தில், டூப்ளிகேட் நாட்டுக்கோழி விற்பனை அமோகம்…..!

வந்திடுச்சு…..நாட்டு கோழியிலும் கலப்படம்….! திண்டுக்கல் மாவட்டத்தில், டூப்ளிகேட் நாட்டுக்கோழி விற்பனை அமோகம்…..!

பிராய்லர் கோழிகளில் ருசி அதிகம் இருக்கும். ஆனால், அது உடல் நலத்திற்கு கேடானது, என்று ஆய்வாளர்கள் பலரும் கருத்துக்களைக் கூறி உள்ளனர்.

குறிப்பாக, இந்த பிராய்லர் கோழிக் கறியைப் பெண் குழந்தைகளுக்கு, கட்டாயம் கொடுக்க கூடாது, என்றும் நிர்ப்பந்தித்துள்ளனர்.

அதற்கு அவர்கள் சொன்ன காரணம், “இந்த பிராய்லர் கோழிக் கறி சாப்பிடும், பெண் குழந்தைகள், சாதாரணமாக இல்லாமல், சிறுமியாக இருக்கும் போதே, வயதுக்கு வந்து விடுகிறார்கள், என்ற அதிர்ச்சிகரமான தகவலைச் சொல்லி உள்ளனர்.

அதனால், தற்போது, நாட்டுக் கோழி பக்கம் மக்கள் சாயத் துவங்கி உள்ளனர். பிராய்லர் கோழியை விட, நாட்டுக் கோழி தரம் உயர்ந்தது. விலையும் அதிகம். ஆனால், அதிக சத்தானது.

இதனால், நாட்டுக் கோழி வளர்ப்பில் பலரும் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார், அய்யலுார் உள்ளிட்ட பல பகுதிகளில், இறைச்சிக் கோழிகளை, நாட்டுக் கோழிகளுடன் இணை சேர்த்து, கலப்பினமாக கோழிகளை உருவாக்குகின்றனர்.

வனராஜா, கிளி, அசில் போன்ற இனங்கள் மட்டுமே, கலப்படம் இல்லாத ஒரிஜினல் நாட்டுக் கோழிகள். ஆனால், தற்போது, இதிலும் கலப்படம் வந்து விட்டது.

இந்தக் கலப்பட நாட்டுக் கோழியை எளிதில் கண்டு பிடிக்க இயலாது. ஒரிஜினல் நாட்டுக் கோழியின் கால்கள், நன்கு தடிமனாக இருக்கும். இதை வைத்தே அடையாளம் கண்டு கொள்ளலாம்.

இனி நாட்டுக் கோழி வாங்கும் போது, அதன் கால்களைக் கவனித்து வாங்குங்கள்!