மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!!

0
26

மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!!

மாரடைப்பு என்பது ஒருவருக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரக்கூடும். பெரும்பாலான மக்கள் மாரடைப்பினால் இறந்தது உண்டு. மாரடைப்பு வருவதற்கு முன்பு சில அறிகுறிகள் நமக்கு தோன்றும் நாம் தான் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு பின்னர் பெரும் கஷ்டத்தை அனுபவிக்கிறோம்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு காலத்தில் மாரடைப்பு வரக்கூடும் எனவே மாரடைப்பிற்கான அறிகுறிகளைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இங்கு மாரடைப்பு ஏற்படப் போகிறது என்பதை வெளிப்படுத்தும் சில முக்கிய அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதயத்திற்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவில் இடையூறு ஏற்படும் போது, மூளைக்கு சமிஞ்கை அனுப்பப்படும். அப்படி அனுப்பப்படும் சமிஞ்கை ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். இதில் முதலில் தென்படும் அறிகுறி

வியர்வை

அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறும். ஒருவர் கடுமையான வியர்வையால் அவஸ்தைப்பட்டு அசௌகரியத்தை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்

மார்பு மற்றும் கைகளில் வலி

மார்பு மற்றும் கைகளில் கடுமையான வலியை சந்திக்கக்கூடும். அதுவும் தாங்க முடியாத அளவில் வலியை அனுபவிக்க நேரிடும்.

மயக்க உணர்வு

மூளைக்கு அனுப்பப்படும் ஆக்ஸிஜனின் அளவு குறையும் போது, தலைச்சுற்றல் அல்லது மயக்க உணர்வை அனுபவிக்கக்கூடும். ஏனெனில் இதய தசைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, இதயத்தால் உடலுக்கு இரத்தத்தை அனுப்ப முடியாமல், மயக்க நிலை ஏற்படும்.

அடிவயிற்று வலி

குமட்டல் அல்லது வாந்தியுடன் அடிவயிற்றில் வலி இருந்தால், அது மாரடைப்பை சுட்டிக் காட்டுகிறது என்று அர்த்தம். குறிப்பாக அதிகாலையில் இம்மாதிரியான நிலை ஏற்பட்டால், அது மாரடைப்பு வர போகிறது என்று தான் அர்த்தம்.