16 வயது மாணவிக்கு மிஸ்டுகால் மூலம் வந்த வினை — அதிர்ச்சி ரிப்போர்ட்

0
41

பீகார் mokama நகரை சேர்ந்தவர் சந்தீப் குமார். பீகாரை சேர்ந்த 16 வயதான பள்ளி மாணவிக்கு பல முறை மிஸ்டுகால் செய்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது சந்தீப் மாணவியிடம் நட்பாக பழகியுள்ளார்.

பின்னர் இவர்களது நட்பானது தொடர்ந்துள்ளது. சந்தீப் இதனை சாதகமாக பயன்படுத்தி தன்னை திருமணம் செய்யுமாறு கூறியுள்ளார். மேலும் தனக்கு 20 வயது ஆகிறது என்றும் அழகாக இருப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் பயது போன மாணவி சந்தீப்பை சந்திக்க ரயில் நிலையம் சென்று அவரை நேரில் பார்த்த போது அதிர்ச்சி யடைந்தார். சந்தீபை பார்த்த போது தனது அப்பா வயது உடைய உங்களை திருமண செய்து கொள்ள முடியாது என அந்த மாணவி கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த சந்தீப் அந்த மாணவியை வற்புறுத்தி ரயிலில் ஏற்றியுள்ளார். இதனையடுத்து கழிவறைக்கு சென்ற மாணவி தன் சகோதரிக்கு போன் செய்து உதவி கேட்டார்.

ரெயில் bhagalpur நிலையத்தினை அடைந்த போது அங்கு காத்திருந்த போலீசார் சந்தீப்பை கைது செய்தனர்.