23 வயது பெண்னுடன் 13 வயது சிறுவனுக்கு நடந்த திருமணம்..!!வைரலாகும் வீடியோ

0
3

13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாக வருகிறது.


காதல் எப்போ எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது தான்..!!!ஆனால் இது காதலா..???

ஆந்திர மாநிலத்திலுள்ள கர்னூல் மாவட்டம் கவுதாளம் உப்பரஹால் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் தன் அக்காள் மகளான 23 வயது இளம்பெண்ணை கடந்த மாதம் 27-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.சிறுவனும் அந்த பெண்ணும் அடிக்கடி வீட்டிற்கு சென்று வரும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதன் காரணமாகவே பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

சிறுவனும், அந்த பெண்ணும் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இப்படி ஒரு திருமணம் நடைபெற்றிருக்கிறது.இந்திய சட்டத்தின் படி 18 வயதிற்கும் குறைவான பெண் அல்லது 21 வயதிற்கும் குறைவாக ஆணிற்கு நடந்த திருமணம் செல்லாது.இந்நிலையில், 13 வயது சிறுவன் மைனர் என்பதை அறிந்தும் 23 வயது இளம்பெண்னுடன் அவரது பெற்றோர்கள் எப்படி திருமணம் செய்து வைத்தார்கள் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப் பட்ட நிலையில் போலீசார் வந்ததால் சிறுவன் மற்றும் அவரது பெற்றோர்கள் தலைமறைவாகி உள்ளனர் மணப்பெண் மட்டும் சிக்கியுள்ளார் , இப்படி ஒரு திருமணத்தை செய்து வைத்த பெற்றோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் கருத்து வலுத்து வருகிறது.

இதே போன்று கடந்த சில மாதங்களுக்கு முன் 18 வயது இளம்பெண் 17 வயது சிறுவன் தன்னை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதால் பரபரப்பு நிலவியுள்ளது.

LEAVE A REPLY