நயன்தாரா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் ,அனிருத்..!!!வைரலாகி வரும் வீடியோ..

0
29

நடிகர் சிவகார்த்திகேயன்,

மிமிக்ரி திறமையால் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய,பசங்க திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகத் திரையுலகில் அடியடுத்துவைத்த இவர்,தற்போது  தமிழ் திரையுலகில் ஒரு தவிர்க்கமுடியாத கதாநாயகனாக மாறிவிட்டார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமின்றி ஒரு சில பாடல்களும் பாடியுள்ளார். ஆனால் தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் பாடலாசிரியராக மாறியுள்ளார்.

கோலமாவு கோகிலா ( கோகோ) நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், லங்கா புரொடக்ஷன்ஸால் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரம் ஏற்று நடித்துள்ளார் அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கோலமாவு கோகிலா படத்திற்காக சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளார். அந்த விடியோவை அனிருத் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திலும் நயன்தாரா தான் அவருக்கு ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் பக்கத்தில் அனிருத் வெளியிட்ட வைரல் வீடியோ

 

LEAVE A REPLY