8 வயது சிறுமி ஆசிபா வழக்கில் ஆஜராகும் பெண் வழக்கறிஞருக்கு வலுக்கும் பின்னணி..!!!

0
39

ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய சிறுமி ஆசிபா வழக்கு,

ஜம்முவில் உள்ள கதுவா பகுதியில் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கதுவா சிறுமி வழக்கில் ஆஜராகும் பெண் வழக்கறிஞருக்கு,
ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் ஆதரவு தெரிவித்துள்ளார். ஜம்முகாஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், சிறுமியின் தந்தை சார்பில் ஆஜரான பெண் வழக்கறிஞர் தீபிகா சிங்

என்பவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து மிரட்டல் வந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் பார் அசோசியேசனில் இருக்கும் சில வழக்கறிஞர்களும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அவருக்கு பல தரப்பில் இருந்து பிரபலங்கள் ஆதரவு கரம் நீட்டியுள்ள நிலையில்,

பிரபல ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சனும், பெண் வழக்கறிஞருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பெண் வழக்கறிஞர் தீபிகாவின் படத்தை வெளியிட்டு, அனைத்து சக்தியும் அவருக்கு கிடைக்கட்டும் என ஆதரவு கரம் நீட்டியுள்ளார்

LEAVE A REPLY