பெண்கள் விடுதியில் மறைந்திருந்து வீடியோ எடுத்த “சென்னை 600028” துணை நடிகர் கைது..!!!

0
45

பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பெண்களை மறைந்திருந்து ஜன்னல் வழியாக செல்போனில் பெண்களை வீடியோ எடுத்த துணை நடிகரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்

சென்னை 600028 உள்ளிட்ட படங்களில் கூட்டத்தில் ஒருவராக முகம் காட்டியவர் நடிகர் வைரமூர்த்தி.

நாகை மாவட்டத்தை சேர்ந்த இவர் தற்போது சினிமா வாய்ப்பு இல்லாததால் சின்ன திரையில் நடித்து வருகிறார். சென்னை ஈக்காட்டுதாங்கல் பூமகள் தெருவில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்லும் வைரமூர்த்தி, அருகில் உள்ள பெண்கள் விடுதியில்

தங்கியிருக்கும் பெண்களிடம் கிண்டல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இது குறித்த பாதிக்கப்பட்ட பெண்கள் ஏற்கனவே விடுதி பாதுகாவலரிடம் தெரிவித்தும் அதை பெரிதுபடுத்தாலும் விட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறிய நடிகர் வைரமூர்த்தி தனது நண்பர் வீட்டில் இருந்து விடுதியின் ஜன்னல் வழியாக பெண்களை வீடியோ எடுத்துள்ளார்.

இதை கவனித்த பெண்கள் சிலர் வைரமூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, அவர்களிடம் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். அருகில் வசிப்பவர்களிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் முறையிட நடிகர் வைரமூர்த்தியை பொதுமக்கள் அடித்து உதைத்து கிண்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். வைரமூர்த்தியின் செல்போனை ஆய்வு செய்ததில் விடுதி பெண்களை ஆபாசமாக படம் பிடித்து வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து பெண் போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்

இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்

LEAVE A REPLY