கோவிலுக்குள் வைத்து மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…!! கையும்களுமாக மாட்டிய பூசாரி..!!!

0
54

மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பூசாரி சூளைமேட்டில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

சென்னை சூளைமேட்டை வசிக்கும் மூன்றரை வயது சிறுமி கண்ணகி தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அதே தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது கோவில் பூசாரி ரமேஷின் உதவியாளர் உதயகுமார்(20)

என்பவர் சிறுமியை கோவிலுக்குள் அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மிரண்டு போன குழந்தை வீட்டுக்கு வந்து அழுதுள்ளார்.

பெற்றோர் விசாரித்த போது கோவில் பூசாரி தன்னை கிள்ளிவிட்டதாக கூறியதால் உஷாரடைந்த பெற்றோர் சிறுமியிடம் நடந்த சம்பவங்களை கேட்டறிந்தனர்.

பூசாரி தொடர்ச்சியாக சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பொதுமக்களிடம் உதயகுமாரின் அத்துமீறலை கூறிய போது அவன் அதே பகுதியில் சிறுமிகளைத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று கூடி உதயகுமாரை அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் தூக்கு தண்டனை விதிக்கப்படும் என அவசரச் சட்டம் இயற்றியுள்ள நிலையிலும்,இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கிறது

இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழேயுள்ள விடியோவை பாருங்கள்

LEAVE A REPLY