இளம் வயது பிரபலம் மர்மமான முறையில் திடீர் மரணம்..!!! சோகத்தில் மூழ்கிய அனிருத் மற்றும் பிரபலங்கள்..!!!

0
10

உலகப்புகழ் பெற்ற DJ Avicii,  இளம் வயதில் மர்மமான முறையில் மரணமடைந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DJ Avicii,ஓர் ஆங்கில இசைக்கலைஞர், இவருடைய இசைஆல்பங்கள் உலகளவில் புகழ்பெற்றது.

DJ Avicii, 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் பிரபல ஆங்கில இதழான (DJ Magazine) ஆண்டுதோறும் வெளியிடப்படும் முதல் 100 இசைக்கலைஞர்கள் பட்டியலில் மூன்றது இடம் பிடித்திருந்தார்.

2012ஆம் ஆண்டில் டேவிட் கெத்தாவுடன் அவர் ஆற்றிய படைப்பு “சன்ஷைன்” (கதிரொளி)க்காகவும் 2013இல் தனது பாட்டு “லெவல்சு”க்காவும் இருமுறை கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ,DJ Avicii ஓமான் தலைநகரம் மஸ்கட்டில் நேற்று முன்தினம் 20-ஆம்தேதி பிற்பகல் முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் எப்படி இறந்தார் என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் DJ Aviciiயின் மரணத்தால் துயரத்தில் மூழ்கியிருப்பதாக ட்விட்டரில் கூறியுள்ளார்.

பாடகி சின்மையும் தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்

அவரது பிரியாவிடை குறித்து காணொளி

LEAVE A REPLY