காதல் மனைவிக்கு பரிசளிப்பதற்காக மனைவின் தோழியை கொன்று மூட்டை கட்டிய கொடூரன்…!!! சென்னையில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!!

0
31

காதல் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிப்பதற்காக நர்சிங் மாணவியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கோயம்பேடு காய்கறி சந்தையில் வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.


கொலை செய்யப்பட்ட வேல்விழி நர்சிங் மாணவி கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னை சூளைமேட்டில் தங்கி, நர்சிங் பயிற்சி பெற்று வந்தார்.

தினந்தோறும் தனது தந்தைக்கு போனில் பேசும் வேல்விழி கடந்த 6-ம் தேதியன்று தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் குழப்பத்தில் இருந்த அவரது தந்தை மகளின் தோழி சத்யாவை தொடர்பு கொள்ள, அவர் வேல்விழியை காணவில்லை என தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர் உறவினர், நண்பர் வீடுகளில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால், 3 நாட்கள் கழித்து, 9-ம் தேதியன்று சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் மாணவியின் தந்தை.பெற்றோரே தாமதமாக புகார் கொடுத்ததால் காதல் விவகாரத்தில் மாணவி சென்றிருக்கலாம் என கருதி அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவி வேல்விழி தங்கியிருந்த வீட்டிற்கு அடுத்து குடியிருந்த அவரது தோழி மகாலட்சுமியின் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக சக தோழிகள் தெரிவித்துள்ளனர்.


அதன் பிறகே அஜீத்குமார் என்ற அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் மாயமான மாணவி கொலை செய்யப்பட்டு கோயம்பேட்டில் வீசப்பட்டிருக்கும் தகவல் தெரிந்துள்ளது. மாணவியுடன் பணிபுரிந்து வரும் அவரது தோழி மகாலட்சுமியை அஜித்குமார் காதல் திருமணம் செய்துள்ளான்.

தான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு வேலிக்குசெல்லமல் திரிந்துள்ளான் சம்பவத்தன்று மாணவி மட்டும் வீட்டில் இருக்கும் போது, அவரது வீட்டிற்கு வந்த அஜித்குமார், தனது மனைவியின் பிறந்தநாளுக்கு பரிசுப் பொருள் அளிக்க பணம் கேட்டுள்ளான்.

தன்னிடம் பணம் இல்லை என மாணவி கூற அவர் அணிந்திருந்த செயினை கேட்டு தொந்தரவு செய்துள்ளான். மாணவி வேல்விழி மறுக்கவே ஒரு கட்டத்தில் கொலை செய்து நகையை பறிக்க திட்டமிட்டு கழுத்தை நெரித்துள்ளான்.

பின்னர், வேல்விழி உடலை சாக்குப்பை ஒன்றில் போட்டு கட்டி, கோயம்பேடு சந்தைப் பகுதியில் வீசிச்சென்றதையும் ஒப்புக்கொண்டான். பிணத்தை வீசிய இடத்தில் தினந்தோறும் சென்று சடலம் அங்கு கிடக்கிறதா என பார்த்துவிட்டு வந்து, நல்லவன் போல் வேல்விழி குறித்து விசாரித்து வந்துள்ளான்.இதைத்தொடர்ந்து, போலீசார் அஜித்குமாரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்

LEAVE A REPLY