மெட்ரோ தொழிலாளர்களுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கர்..!!!வைரலாகும் வீடியோ

0
49

மெட்ரோ தொழிலாளர்கள் உடன் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடி ஆச்சரியப்படுத்தி உள்ளார் தற்போது இந்த வீடியோ வைரலாகிவருகிறது.

மகாராஷ்டிராவிலுள்ள பந்த்ரா பகுதியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அங்கு மெட்ரோ பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் இரவு நேரத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். காரில் அப்பகுதியை கடந்து செல்லும் போது அதனை கண்ட சச்சின் திடீரென அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

காரில் இருந்து இறங்கிய சச்சின் அவர்களுடன் கிரிக்கெட் விளையாட்டில் இணைந்தார். சிறிது நேரம் பேட்டிங் செய்த அவர் பின்னர் தொழிலாளர்களுடன் புகைப்படம் எடுத்து விடைபெற்றார்.

சச்சின் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ

LEAVE A REPLY