இனி ஆஸ்திரேலியாவுக்காக விளையாடப் போவதில்லை என டேவிட் வார்னர் கண்ணீர் பேட்டி..!!!

0
9

இனி ஆஸ்திரேலியாவுக்காக விளையாடப் போவதில்லை.பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக கண்ணீர் விட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ள டேவிட் வார்னர்,

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டதுடன் ஓராண்டு தடையும், கேமரூன் பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாதம் தடையும் விதிக்கப்பட்டது. இதை அடுத்து நாடு திரும்பிய ஸ்டீவ் ஸ்மித், ரசிகர்களிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார்.

இதைத்தொடர்ந்து, டேவிட் வார்னரும் ஆஸ்திரேலியா திரும்பினார்.

சிட்னியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

நாட்டு மக்களும், கிரிக்கெட் ரசிகர்களும் தன் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டேன்,தவறான முடிவை எடுத்து நாட்டை தரம் தாழ்த்தி விட்டதாக கூறிய வார்னர், மீண்டும் மக்கள் நம்பிக்கையை பெறுவதற்கான வழியை தேடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக கண்ணீர் சிந்தினார்.

இனி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடப் போவதில்லை என்று கூறிய அவர், ஓய்வு குறித்து குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்

 

LEAVE A REPLY