நண்பருடன் இந்தியாவுக்கு தப்பிவந்த துபாய் இளவரசி..!!!

0
7

கடல்வழியாக இந்தியாவுக்குத் அடைக்கலம் தேடிவந்த துபாய் இளவரசியை மீட்ட இந்திய கடலோர படை.

இந்தியாவுக்குத் தப்பி வந்த துபாய் இளவரசியை இந்தியக் கடலோரக் காவல்படையினர் கோவா அருகே சுற்றிவளைத்துப் பிடித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது

.இது சர்வதேச மனித உரிமைகள் மற்றும் அகதிகள் பற்றிய ஜெனிவா ஒப்பந்ததிதிற்கு விரோதமான மோசமான செய்கையாகும்.

துபாய் பிரதமர் சேக் முகமது பின் ரசீது அல் மக்தூமின்

மகளும் துபாயின் இளவரசியுமான சேகா லத்தீபா குதிரையேற்றம், மலையேற்றம், பாரா கிளைடர், செயற்கை இறக்கையைக் கட்டிக் கொண்டு வானில் பறத்தல் உள்ளிட்ட பயிற்சிகளில் ஆர்வமுடையவர்.

தந்தையின் கட்டுப்பாட்டில் இருப்பது பிடிக்காத இவர், இந்த மாதம் 4ஆம் தேதி அமெரிக்க, பிரெஞ்ச் குடியுரிமையுள்ள தனது நண்பர் ஹெர்வ் ஜாபர்ட் என்பவருடன் நோஸ்ட்ரோமோ என்கிற படகில் ஏறிக் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பி வந்துள்ளார். இந்தத் தகவலை அறிந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர் துபாய் இளவரசி தப்பி வந்த படகைக் கோவா அருகே மடக்கியுள்ளனர். இளவரசியையும் அவர் நண்பர் ஹெர்வ் ஜாபர்ட்டையும், மீட்டு ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் இதைப்பற்றி தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்

LEAVE A REPLY