வீடியோ ஆதாரத்துடன் கையும் களவுமாக மாட்டிய ஆஸ்திரேலியா அணி..!!

0
18

தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் ஆஸ்திரேலியா அணிவீரர் பந்தை சேதப்படுத்தும்போது கைகளுமாக சிக்கியுள்ளார்

ஆஸ்திரேலிய வீரர் கேமரான் பேங்கிராப்ட் மஞ்சள் நிற டேப்பைப் பந்தின் மீது தடவிப் பந்தைச் சேதப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

போட்டி அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது பேங்கிராப்ட், ஆட்டத்தின் போக்கை மாற்றத் தான் அவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆட்ட இடைவேளையில் அணியினர் கூடிப்பேசி இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, அணியின் தலைவர், துணைத் தலைவர் பொறுப்புகளில் இருந்து ஸ்டீவ் சுமித்தும், டேவிட் வார்னரும் விலகியுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY