கார் விபத்தில் சிக்கி பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தலையில் காயம்..!!!

0
13

இன்று காலை காரில் டெல்லிக்கு நோக்கி முகமது ஷமி சென்றார். அப்போது ஷமியின் காரை முந்திச் செல்ல முயன்ற டிரக் ஒன்று, பின்னால் இருந்து மோதியது.

இவ்விபத்தில் ஷமியின் தலை மற்றும் வலது கண்ணுக்கு மேல் பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஷமியின் காயங்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி,தன்னுடைய கணவரான ஷமி மீது பல்வேறு குற்றச்சாட்டை வைத்தார்.

அவருக்கு பல பெண்கள் உடன் தகாத உறவு உள்ளது என்றும், சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும்,அதற்காக பணம் பெற்றதாகவும் பல்வேறு குற்றச்சாட்டை முன்வைத்தார்…

மேலும்,ஷமி குடும்பத்தினர் பலமுறை,ஜகானை கொலைசெய்ய திட்டமிட்டதாகவும்ஒரு கட்டத்தில் டார்ச்சர் தாங்க முடியாமலும்,பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததாலும் அவர் மீது குற்றச்சாட்டைமுன்வைத்து,பின்னர் கொல்கத்தா காவல் நிலையத்தில் வழக்கும் பதியப்பட்டது

மேட்ச் பிக்சிங் செய்ததாக கூறப்பட்ட நிலையில்,இதை விசாரித்த பிசிசிஐ., ஷமி, எவ்வித மேட்ச் பிக்சிங்கிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்து, ஐபிஎல்., தொடரில் பங்கேற்க அவருக்கு அனுமதி அளித்தது.

இதனால் சுமார் 15 நாட்களுக்கு மேலாக மெண்டல் டார்ச்சரில் இருந்த ஷமி, டேராடுனில் உள்ள அபிமன்யூ கிரிக்கெட் அகாடமியில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராக சென்றிருந்தார்.

இந்நிலையில் டேராடுனில் இருந்து இன்று டெல்லி திரும்பியபோது

தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

LEAVE A REPLY