வங்கதேசத்துக்கு எதிரான வெற்றி குறித்து மணம் திறந்த தினேஷ் கார்த்தி..!!!

0
34

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. லீக் சுற்று முடிவில் இந்தியாவும், பங்களாதேஷூம் ஃபைனலுக்கு மோதின போட்டி கைவிட்டுப் போய்விடும் என்ற நிலையில்.தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்

சென்னை சேப்பாக்கத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தினேஷ் கார்த்திக், இந்திய அணியில் சிறப்பான வீரர்கள் பலர் இருப்பதால், அதில் இடம்பிடிப்பது கடினமான காரியம் என்றும், எனவே ஒவ்வொரு இன்னிங்சும் முக்கியம் என்று தெரிவித்தார்.

முதல் சிக்ஸ் அடித்த பின்னர் சங்கிலி தொடர் போல் ரன் குவித்ததாகவும், கடைசி பந்தை வங்கதேச வீரர் வீசுவதற்கு ஓடி வரும்போதே வெற்றி பெறப் போவதை மனதில் உறுதி செய்து விட்டதாகவும் கூறினார். சென்னையைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசுவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.

அவரது முழுப்பெட்டியை கீழேயுள்ள வீடியோவில் பாருங்கள்

LEAVE A REPLY