இலங்கை வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் நடந்த அத்துமீறல்..!!!

0
38

முத்தரப்பு 20 ஓவர் தொடரில் இறுதிச்சுற்றில் இந்தியாவுடன் மோதப் போகும் அணி எது? என்பதை தீர்மானிக்கும் போட்டி நேற்று நடைபெற்றது.

கொழும்புவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில், முதலில் விளையாடிய இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. பின்னர், களமிறங்கிய வங்கதேச தொடக்க வீரர், தமிம் இக்பால் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில், வெற்றி பெறுவதற்கு 12 ரன்கள் தேவைப்பட்ட போது, உதான வீசிய இரண்டாவது பந்து, தோள்பட்டைக்கு மேல் உயரமாக சென்றதால், நோ பாலாக அறிவிக்குமாறு, பேட்ஸ்மேன் வாதிட்டார். அப்போது, இரு அணி வீரர்களுக்கும் இடையே மூண்ட வாக்குவாதத்தால் போட்டியில் இடையூறு ஏற்பட்டது.

சமாதானத்திறகு பின்னர் போட்டி மீண்டும் நடந்தது. அப்போது, கடைசி 3 பந்துகளை எதிர்கொண்ட மஹ்மதுல்லா பவுண்டரி, சிக்சரை விளாசி வெற்றி இலக்கை எட்டினார்.சண்டை சச்சரவுகளுடன் வங்கதேசம் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன், வங்கதேசம் மோத உள்ளது.

இந்நிலையில் வெற்றி பெற்ற மறு கணமே வங்கதேச அணி வீரர்களின் உடை மாற்றும் அறையின் கண்ணாடி கதவுகள் நொறுக்கப்பட்டன.

இதைச் செய்தது வங்கதேச அணி வீரர்களாக தான் இருக்கக் கூடும் என்று பல தரப்பினரும் சந்தேகம் எழுப்பி உள்ளனர். போட்டி நடுவர் க்றிஸ் ப்ராட் இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை கண்காணித்து விசாரணை நடத்தி வருகிறார்

இதனை பற்றி மேலும் தகவல் பெற கீழே உள்ள விடியோவை பாருங்கள்

LEAVE A REPLY