மர்ம நபர்களால் தாக்கப்பட்ட I.T ஊழியரிடம் போலீசார் நடத்திய விசாரணை வீடியோ..!!!

0
27

சென்னை,பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மென்பொறியால் நிறுவனத்தில் ஒன்றில் பணிபுரியும் 26 வயதாகும் லாவண்யா

இவர்  தனது நேர பணியை முடித்துவிட்டு இரவு 2 மணிக்கு வீட்டிற்கு செல்லும் பொழுது அடையாளம் தெரியாத மர்மநபரால் இரும்பு rod ஆல் கடுமையாக தாக்கி, நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

பின்னர் அவர் போலீசாரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்
இந்த சம்பவம் 13 .02 .2018 அன்று இரவு 2 மணியளவில் பெரும்பாக்கம்,சென்னை யில் நடந்துள்ளது .
போலீசார் இது குறித்து விசாரித்துக்கொண்டுள்ளனர்

இந்நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது எடுத்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு அந்த பெண் சிரமப்பட்டு பதிலளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

அந்த பெண் கம்பியால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், வீடியோ காட்சியில் முகத்தில் பயங்கர வெட்டுக் காயங்கள் இருக்கிறது. இதனால் அவர் வெட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

அந்த பெண்ணுக்கு சுயநினைவு திரும்பினாலும், தொடர்ந்து அவர் அபாய கட்டத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது. இதனிடையே, அந்த பெண் ஊழியர், குற்றவாளிகளின் அடையாளங்களை போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY