“கலகலப்பு 2 ” திரைப்பட விமர்சனம்..!!!சிவா,ஜெய்,ஜீவா,கேத்தரின் தெரசா,நிக்கி கல்ராணி.

0
30

2012 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ஒரு நகைச்சுவைத் திரைப்படம் கலகலப்பு. இதில் விமல், சிவா, அஞ்சலி மற்றும் ஓவியா ஆகியோர் நடித்திருந்தனர். கலகலப்பு, இயக்குனராக சுந்தர் சி யின் திரைப்பட வாழ்க்கையில் 25 வது படம். இந்தத் திரைப்படம் முதலில் மசாலா கஃபே என்றழைக்கப்பட்டது ஆனால் பின்னர் கலகலப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.

இதை தொடர்ந்து கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இதன் 2 ஆம் பாகம் (கலகலப்பு 2 ) படப்பிடிப்பு ஆராம்பமானது இதில் ஜீவா , ஜெய் , சிவா , நிக்கி கலாராணி மற்றும் கேத்தரின் டிரெஸா ஆகியோரின் நடிப்பில் மீண்டும் குஷ்பூ தயாரிப்பில் சுந்தர்.சி இயக்குகிறார் முன்னணி பாத்திரங்களில் இந்தத் திரைப்படம் இடம்பெறுகிறது
இந்நிலையில் இன்று படம் வெளியாகியுள்ளது.

சுந்தர்.சி படம் என்றாலே சமீப காலமாக ஒரு களம் தான். ஏதாவது ஒரு விஷயம் தொலைந்து போகும், அது பல பேர் கையில் சென்று கடைசியில் பெரிய சண்டைகள் முடிந்து சுபம் போடுவார்கள்.

அதேபோல் தான் காசியில் மேன்ஷன் வைத்து பிழைத்து வருகின்றார் ஜீவா. ஆனால், அந்த மேன்ஷன் ஜெய்யிற்கு சொந்தமானது, அந்த மேன்ஷனை விற்று தன் குடும்ப வறுமையை போக்க, ஜெய் காசி வருகின்றார்.

அங்கு ஜெய் எதற்கு இந்த மேன்ஷனை விற்க வேண்டும், நாம் சேர்ந்த நடத்தலாம், என முடிவிற்கு வர, இருவருக்குமே பணம் தேவைப்படுகின்றது. சில நாட்களுக்கு முன் இவர்கள் இருவரின் பணத்தையுமே சிவா திருடுகின்றார்.

இருவருக்குமே ஒரே எதிரி என்பதால் சிவாவை ஜீவா, ஜெய் தேடிச்செல்ல, அதன் பின் நடக்கும் கலகலப்பான சம்பவங்களே இந்த கலகலப்பு-2வின் மீதிக்கதை.

இப்படத்தை பற்றிய கருத்தை இவ்வீடியோவில் காண்போம்

LEAVE A REPLY