அந்நிய கலாச்சாரத்திற்கு மாறி , அடிமைகளாகிக் கொண்டிருக்கும் நாம் இதை ஒரு நிமிடம் தவறாமல் படித்து சிந்திப்போம்! அருமையான பதிவு!

கவுண்டமணியைப் பார்த்து செந்தில் கேட்பதைப் போல , நேற்று ஒரு நண்பர் என்னைப் பார்த்து கேட்டார் :

“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே .! அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”
என்ன பதில் சொல்வது இதற்கு..?
.
லாஜிக்படி பார்த்தால் , எல்லா இலைகளையும் போலத்தான் வாழை இலையும் ..!
எனவே நண்பரின் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் ,”நீங்களே சொல்லுங்க ..!”என்றேன்.
.
நண்பர் இதற்கு ஒரு சுவையான கதையைச் சொன்னார் :
“புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் இவ்வளவு பெரிய கோடு கிடையாதாம்..!
இராமாயண காலத்தில் ….

ஒரு முறை ராமன் சாப்பிடும்போது அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம்
இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம்
.
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி
வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு பெரிய கோட்டைக் கிழித்தாராம் ராமன்.
.
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும்
அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம்.
அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம்

கதை சுவையாகத்தான் இருக்கிறது…!
.
நல்லது… வாழை இலை பற்றி இன்னும் சில விஷயங்கள் :
.
வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,சாப்பிடும் முன் … ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.
.
“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..?
இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?
.
சிம்பிள் ..!
.
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.
.
ஏன்..?
.
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால்
இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!
.
சரி …உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம்
இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?
.
உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது
கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !


சாதம் , காய் கறிகள் … இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் .
அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
.
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?
.
இல்லை..!
.
இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்… அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.
.
அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது …
எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?
.
ஆனால் ….
இவை எல்லாவற்றையும்
ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு பலி கொடுத்து விட்டு ,

அந்நிய கலாச்சாரத்திற்கு மாறி , அடிமைகளாகிக் கொண்டிருக்கும் நம்மை ,
இனி யார் வந்து திருத்துவது..?